Announcements - General
VSEED சங்க பொதுக்குழு கூட்டம் -2022
வாழ்த்துரை
1.சங்கம் வாழ்க சமூகம் வாழ்க-அதில்
அங்கம் வகிக்கும் அனைவரும்-வாழ்க
சமூக மேம்பாட்டு சிந்தனை வாழ்க
பொருளாதார மேம்பாட்டு புத்தாக்கம்-வாழ்க
கல்வி மேம்பாட்டு கனவுகள்-வாழ்க
இவை அனைத்தையும் அடைந்திடவே
அமைந்தது தான் நம் வீசீட்சங்கம்.
நாடு வாழ்க வீடு வாழ்க
நம் வீசீட்சங்கம் நிலைத்து வாழ்க.
2.சங்கம் வாழ்க சமூகம் வாழ்க-அதில்
அங்கம் வகிக்கும் அனைவரும்,வாழ்க
தலைவர் வாழ்க துணைத்தலைவர் வாழ்க
செயலர் வாழ்க இணைச்செயலர் வாழ்க.
பொருள் வாழ்க பொருளாளர் வாழ்க.
சிறப்பாய் செயல்பட விழையும்
செயற்குழு உறுப்பினர் அனைவரும் வாழ்க.
3.சங்கம் வாழ்க சமூகம் வாழ்க-அதில்
அங்கம் வகிக்கும் அனைவரும்-வாழ்க
எட்டு ஆண்டுகளை எட்டிவிட்டோம்-இனி
எட்ட வேண்டியது தொலைதூரம்.
சமூக சேவையில் சில பணிகளை
முடித்துவிட்டோம்-ஆனால்
பல பணிகள் நம் பார்வைக்கும்
செயலுக்கும் காத்து நிற்கின்றன.
முயற்ச்சியும் பயிற்ச்சியும் முடிசூடிவிட்டால்
முன்னேற்றம் என்பது சாத்தியமே-அதை
சாத்தியமாக்கும் மனமும் மார்க்கமும் உங்களிடமே..!
4.சங்கம் வாழ்க சமூகம் வாழ்க-அதில்
அங்கம் வகிக்கும் அனைவரும் வாழ்க
நன்றி வணக்கம்.
அன்புடன்,
டி. ரமேஷ்,
செயற்குழு உறுப்பினர், வீசீட்சங்கம்.